Feb 9, 2010

ஓர் அகதியின் தேசியகீதம்



கூழானாலும் குளிதுக்க்குடி
கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு... என்று
பள்ளி பாடம் எழுதியவள்

கிழிந்த கந்தல் ஆடையுடன்
தண்ணீர் மட்டும் பருகிச் செல்கிறாள்
அகதிகள் முகாமில்...

ஒலிபெருக்கியில் தேசியகீதம்
பசிமயக்கத்தில் இதழ் பிரியாது
மெல்ல முனுமுனுக்கும் அப்பிஞ்சின்
நிலை கண்ட அவள் தோழி ...

சப்தமாக பாடு அப்போதுதான்
இறைவன் நம்மை இங்காவது
நிலைக்க செய்வான் என்றாள்

பிஞ்சுகளுக்கே உள்ள மொழியில்...

மதிய உணவு இடைவேளை
மணி ஒலித்தது
அச்சிறுமியின் முகம் மலர...