Mar 5, 2014

வேறொன்றும் யான் வேண்டேன் ...





காரணங்கள் 
யாது நீ மொழிந்தாலும் 

மனதோ 
தனிமை எனும் நூல் கொண்டு 
சுழற்றப்பட்ட பம்பரம்  போல 
நம் நினைவுகளை 
தின்று கொண்டே 
சுற்றுகிறது 

அது சுழிப்புள்ளியில் ஓயும் முன் 
உன் மதிமுகம் காட்டிவிடு  
வேறொன்றும் யான் வேண்டேன் 
எனதுயிர் தொலைந்து போகும் உன்னிடம்