Mar 11, 2009

My Room met


நேர்முகதேர்வின்போது அவனது நீலநிற சட்டையும்
நன்கு மெருகேற்றிய கருப்பு ஷூவும்...
என் கடற்கரை நடைபயணத்திற்குஅவனது
வாசனை திரவியமும், ஜீன்சும்...
அலுவலகம் முடித்து அறைக்கு வந்ததும்
என்னை பார்த்து அவன் "சாப்டாச்சா" என்று
நாட்கள் ஒன்றும் அதிகமில்லை நாங்கள் பழகி
இன்றோடு மூன்றாம் நாள் நான் வந்து...
இதற்குபெயரும் நட்புதானோ !

ஈரநிலம்...


மழை பெய்த மண்சாலையில் நின்றது பேருந்து...
உனக்காக காத்திருக்கின்றது ஈரநிலம்...
உன்பாத சுவடுகளை முத்தமிட !
நான் எழுதநினைத்தது என்னவோ...
உன்னை நினைக்கும்போது
எனது தாய்மொழிகூட தடுமாறுகின்றது
உன்னோடு ஒப்பிட உவமைகளும்
உருவகங்களும் இல்லையே என்று...

நான் சம்பாதித்தவை...


கையில் காசில்லை
காதலுக்கு மட்டும் குறைச்சலில்லை...
பயணம் செய்வதற்கு மட்டுமே பணம்...
எனக்கெனவே வந்தது உணவகம் நில்லா பேருந்து...

என்னவளுடன் புதுப்பாதை தேடிய பயணம்
என்மனம் புரியாதா என்னவளுக்கு...
முகமோடு முகம் அவளின் மூச்சுக்காற்று
என்னை கலவரப்படுத்தியது...காதருகில்
மெல்ல கூறினால் என்னக்கு பசிக்கவில்லையேன்று

அந்த பொய்கூட அழகாய் இருந்தது அச்சூழ்நிலையில்..
மின்விளக்குகள் அணைக்கப்பட
நிலவொளியில் எனது நிலவுடன் பயணம்...
விடியலின் மடியில்... நின்றது பேருந்து...

என்னிலை தெரிந்து
எங்களுக்காக காத்திருந்தான் எனது நண்பன்....
புதுவாழ்கையை துவக்கி வைப்பதற்காக!!!