Mar 11, 2010

பார்வைகள் சில வினாடிகளில் ...



பேருந்துநிறுத்த தூணில் நான்
ஊர்தி வரும் வழி பார்த்து அவள்
வீசிய காற்றில் அசைந்த கூந்தலை
சரிசெயதவாறே திரும்புகிறாள்...
என் கண்கள் அவளினை நோக்கி...
வினாடிகளில் முகம் சுளிதவள்
என் தேடல் கண்டு... சூழ்நிலை
விளக்கி வருத்தம் கோருகிறாள்
நான் தவறவிட்ட கம்பினை
கையில் கொடுத்தவாறே !