Jun 28, 2009

என் சிரிப்பின் பின்னால்


இருக்கும் போது
திரும்பிக்கூட பார்க்காதவள்
இன்று ஏக்கத்தோடு
கடந்து செல்கின்றாள்
என் கல்லறையை...

அவளின் குழந்தைகள்
தமது அப்பாவிடம்
அம்மா அழுகின்றாள் !
அங்கு வரும்போது மட்டும் என்றுகூற...

அவரோ
என் சிரிப்பின் பின்னால்
அவளின் அழுகை மட்டுமே
மாறாத உண்மை என்றார்
தன்னுள்ளாகவே ...

Jun 22, 2009

உன் விழிகள்...


சத்தமின்றி
ஒரு யுத்தம் உன் விழிகள்...
யுத்தமின்றி ஒரு சகாப்தம்
நம் காதல் ....

May 6, 2009

அழகு


அழுகை
கூட அழகுதான்...
ஆறுதல் சொல்ல
நீ இருந்தால்......

Mar 20, 2009

எனது கிறுக்கல்கள்நித்திரை கலைந்து
நிஜம் மறந்து
என் காதலை
உன்னிடம் சொல்கையில் ...
போர்களத்தில் வித்தை
கற்றுக்கொள்ளும் உணர்வு !

Mar 11, 2009

My Room met


நேர்முகதேர்வின்போது அவனது நீலநிற சட்டையும்
நன்கு மெருகேற்றிய கருப்பு ஷூவும்...
என் கடற்கரை நடைபயணத்திற்குஅவனது
வாசனை திரவியமும், ஜீன்சும்...
அலுவலகம் முடித்து அறைக்கு வந்ததும்
என்னை பார்த்து அவன் "சாப்டாச்சா" என்று
நாட்கள் ஒன்றும் அதிகமில்லை நாங்கள் பழகி
இன்றோடு மூன்றாம் நாள் நான் வந்து...
இதற்குபெயரும் நட்புதானோ !

ஈரநிலம்...


மழை பெய்த மண்சாலையில் நின்றது பேருந்து...
உனக்காக காத்திருக்கின்றது ஈரநிலம்...
உன்பாத சுவடுகளை முத்தமிட !
நான் எழுதநினைத்தது என்னவோ...
உன்னை நினைக்கும்போது
எனது தாய்மொழிகூட தடுமாறுகின்றது
உன்னோடு ஒப்பிட உவமைகளும்
உருவகங்களும் இல்லையே என்று...

நான் சம்பாதித்தவை...


கையில் காசில்லை
காதலுக்கு மட்டும் குறைச்சலில்லை...
பயணம் செய்வதற்கு மட்டுமே பணம்...
எனக்கெனவே வந்தது உணவகம் நில்லா பேருந்து...

என்னவளுடன் புதுப்பாதை தேடிய பயணம்
என்மனம் புரியாதா என்னவளுக்கு...
முகமோடு முகம் அவளின் மூச்சுக்காற்று
என்னை கலவரப்படுத்தியது...காதருகில்
மெல்ல கூறினால் என்னக்கு பசிக்கவில்லையேன்று

அந்த பொய்கூட அழகாய் இருந்தது அச்சூழ்நிலையில்..
மின்விளக்குகள் அணைக்கப்பட
நிலவொளியில் எனது நிலவுடன் பயணம்...
விடியலின் மடியில்... நின்றது பேருந்து...

என்னிலை தெரிந்து
எங்களுக்காக காத்திருந்தான் எனது நண்பன்....
புதுவாழ்கையை துவக்கி வைப்பதற்காக!!!

Mar 7, 2009

நதியில் விழுந்த இலையாய்...


ஓடும் நதியில்
விழுந்த இலையாய்...
விழுந்த இடமும் தெரியவில்லை
போகும் இடமும் புரியவில்லை
ஆனால் மிதக்கையில் மட்டும்
உன் நினைவுகளுடன் என் பயணம்.

ரசிக்க முடியவில்லை...என்னால் !


மழை பெய்யும் மாலைப்பொழுது,
பேருந்தின் சன்னலோர பயணம்.
குழந்தையின் சிரிப்பு!
இயற்கையின் வனப்பு!
பூக்களின் புன்னகை!
ரசிக்க முடியவில்லை...என்னால்
எனது பயணங்களில் பாதைகளாய்
உனது நினைவுகள் மட்டுமே !!!!

சொல்லாமல் வென்றேனோ?


நான் கண் கொண்டு பார்க்கும்போது
நீ மண் பார்த்து செல்கின்றாய்...
நான் என் வீட்டு திண்ணையில்
நீ என் வீதி கடக்கையில்
உன் கூந்தலில் ஒற்றை ரோஜா !
உதிர்ந்தது என் வாசலில்...
கைகள் பொத்தி எடுத்துவந்தேன்...
வாடவில்லை நம் காதல்...

என் தாய் தகப்பன் தம்பி தங்கை


சுடும் வரை சூரியன்
சுற்றும் வரை பூமி
பொருத்தது போதும்
பொங்கி எழு என் தமிழா...

ஜாதி மத இன பாகுபாடின்றி
ஒன்று சேருவோம் நம் குலம் தழைக்க...
அரைநூற்றாண்டுகளாய் அமைதிகாத்தது
நன்முறை வேண்டி...

இன்றோ ஈழத்தில் என் தாய்
தகப்பன் தம்பி தங்கை...
பாதுகாப்பு எனும் பெயரில்
பாதையின்றி வாழவழியின்றி வதைகப்படுகின்றார்கள்...
புழு கூட தீண்டும் போது நெளிந்து தன்
எதிர்ப்பினை காட்டும்....
என் தமிழன் கேட்டால் வன்முறையாம்...

ஒன்றுபடு தமிழா...
இன்றேனும் விழித்துக்கொள்
இல்லையேல் தமிழன் எனும் இனம்
தரையோடு தரையாய்.....

வன்முறையற்ற வையகம்...காலைப்பொழுது விடிகின்றது ...
ஆதவன் சன்னல் வழியே..
காலை வணக்கம் சொல்கின்றான்

பேருந்து நிறுத்தத்தில்
பள்ளிக்குழந்தைகள் ஆனந்தமாய்
விளையாடுகின்றார்கள்.. எங்கும் அமைதி ...

பத்திரிக்கை தொலைக்காட்சியில் கூட
எவ்வித வன்முறை செய்திகளும் இல்லை
தேநீர் வரும்வரை செய்திகள் ஓடிகொண்டிருகின்றது ...

இலங்கையில் தமிழனும் சிங்களனும்
பரஸ்பரம் பேசிகொண்டிருகின்ரர்கள்...

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மக்களின்
இல்ல திருமணவிழா
பாகிஸ்தானில் இந்தியரின் தபால்தலை..
இந்தியாவில் பாகிஸ்தானியரின் திருவுருவச்சிலை
அமெரிக்க கல்லூரிகளில்
ஈராக் மாணவமணிகள் ...
சோமாலியாவில் உணவுப்பொருள் ஏற்றுமதி

இம்முறையும் உலகச்சுகாதார விருது இந்தியாவிற்கே
நிலவில் கோடம்பாக்கம் திரையரங்கு...
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல கட்டணக்குறைப்பு !

அணைத்து நாடுகளும்
ஒன்றுகூடி உலகமைதி நாளை
மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றர்கள்
இந்திய பிரதமர் இருபத்திஎட்டாம்
பிறந்த நாளை இனிதே கொண்டாடுகின்றார் ...

பள்ளி சேர்க்கை படிவத்தில்
ஜாதி மதம் இனம் அச்சடிக்கப்படவில்லை
குமரி முதல் காஷ்மீர் வரை
எந்த ரயில்நிலையத்திலும் பிச்சை குரல் ஒலிக்கவில்லை...

இன்னும் பல உலகச்செய்திகளில்
வளமையும் உயர்ந்த வாழ்க்கைத்தரமும்...
கண்விழித்து பார்த்தால் கனவு !

வரலாறு முதன்மைதான்
ஆனால் அந்த வரலாறு வரும்
தலைமுறையினர்க்கு வன்முறையற்ற
வாழ்கையை தரவேண்டும்..

காயங்களும் வடுக்களும் நம்மோடு...
வரும் தலைமுறையினர்க்கு வன்முறை
தெரியாத வரலாற்றை போதிப்போம்
அமைதி எனும் மொழி அனைத்து
நாடுகளுக்கும் தேசிய மொழியாக இருக்கட்டும்...
வாழ்க பாரதம் வளர்க வையகம்...

சிறுகனத்தில் சிற்றுதடு கடித்து...


கண்கள் இறுகமூடி
இரவென்னும் ஆழமறிய
தொலைதூரம் பயணித்தேன்
கனவென்னும் வாகனத்தில் !

எதிர்பட்ட ஓர் சிறுமியிடம்
உன் மனம்கவர் நிறம் கேட்டேன்
வெண்மை என்று கூறிய
சிறுகனத்தில் சிற்றுதடு கடித்து
சிகப்பென்று கூறினால் அச்சிறுமி ...

என்புருவம் பார்த்த அப்பிஞ்சு ...
காலைப்பொழுதில் பணித்துளிகளினூடே
மலர்ந்த வெள்ளை ரோஜா
முழுக்கதிரவன் வரும் வேளைக்குள்
சிப்பாய்களின் சினத்தில்
என்மக்கள் குருதிதெறித்து சிகப்பாய்...
வெண்மை நிறத்தை நீ எங்கு
காணினும் காணமுடியாதென்றால் அச்சிறுமி...

எதிர்பட்ட ஒரு பெரியவரிடம்
தனிமையின் தாக்கத்தை
மறக்க அழைத்தேன்
தாய்மண்ணை விடப்பெரிதல்ல
என்தனிமை முடியுமென்றால்
உன் நம்பிக்கையையும் என்னிடத்தில்
தந்துவிட்டுபோ என்றார் ...

பயணக்களைப்பில் எனைமறந்து
அயர்ந்துவிட்டேன் மெல்லிய வார்த்தைகளாய்
தொலைவில் ...

அறிக்கைகளும் சிற்சில மோதல்களுமே
நம் அரசியலுக்கு போதுமென்றார்கள் !
கணவிலும்கூட என் இயலாமை
என் நம்பிக்கையை தோற்கடித்தது...

பூ ...

யார் கூறியது நான் பறிக்கும்போது
இறந்துவிடுகிறேன் என்று ?
அவள் கூந்தலில்தான் எனது வாழ்கையே...

அறியாமையா ? அறிய இயலாமையா ?

அன்றுதானடி உணர்ந்தேன் உன்னை
உன்னுடன் பயணித்துக்கொண்டு வருகையில்...
நின்றுவிட்டேன் நான் உனக்குத்தெரியாமல் !!!!
நீ உனது இருக்கையில் அமர்த்து
வகுபறைவாசல் பார்த்து
உன் கண்களை வருத்தி
என்னை தேடுகின்றாய்....ஆனால்
என்னை நேரில் பார்க்கும்போது மட்டும்
கண்டும் கானாமல் இருக்கிறாய்
நமக்குள் ஏனடி இந்த சலனம்
அறியாமையா ? அறிய இயலாமையா ?

என்னைபோல் ஒருவன்...


வழிநெடுகிலும் தேங்கிய மழைநீர
காற்றில் பறந்த பருத்தி பஞ்சாய் குடிசைகள்
இருந்தும் திறந்திராத மருத்துவமனைகள்
பாழடைந்த வகுப்பறைகள்
நிற்காத பேருந்து
நின்றுபோன மின்சாரம்
தடைப்பட்ட குடிபொருள் விநியோகம்
தடையில்லா வறுமை தாண்டவம்
இருந்தும் மனதில் ஓர் சந்தோசம்
நாங்களும் இந்திய தாயின்
குழந்தைகள் என்று !!!

நினைவுகள்...


நிழற்படங்களில் அன்பு காட்டும்
இவ்வுலகில் என்னிடம்
உன் நிழற்படமும் இல்லை
நிஜமும் இல்லை
உன் நினைவுகள் மட்டுமே .....

நீ அழகு...உன் மௌனம் உன்னை விட அழகு....


எனது அனைத்து கேள்விகளுக்கும்
கண்களால் பதில் சொல்கின்றாய்...
என் காதலுக்கு மட்டும் உன் மௌனத்தையே
பதிலாய் தருகின்றாய்...!!!!
நீ அழகு...உன் மௌனம் உன்னை விட அழகு....
உன் அழகில் மெய்மறந்த எனக்கு
உன் கண்களால் பதில் சொல்லடி பெண்ணே....

பெரு வெள்ளம் சிறு துளியாய்.....

ஓர் மார்கழியின் அதிகாலையில்
நீ குளித்துவிட்டு தலைதுவட்டும் போது
உன் முகமென்னும் சமவெளிகளின் வழியே
பயணித்த ஒற்றை நீர்த்துளி உன் உதடுகளில்
பட்டுதெரித்து என் முகம் மேல்...
ஓர் பெரு வெள்ளம் சிறு துளியாய் !!!!

நீ எங்கே இருக்கிறாய்...

எழுதினேன் எனது முதல் கவிதை
பிரசுரம் ஆகமலே பிரபலமாகிவிட்டதடி நம் வகுப்பறையில்
கேலிகளும் கேள்விகனைகளும் உனக்கு சொந்தமாய்
அன்று உன்னை காயபடுதியதர்க்காக
இன்றுவரை என்மனம் மண்ணிப்பு கோருகின்றது ...
(நீ எங்கே இருக்கிறாய்)

நீ வகுப்பறைக்கு வராத நாட்களில்நீ வகுப்பறைக்கு வராத நாட்களில் ...
இயற்பியல் புரியவில்லை
வேதியியல் விளங்கவில்லை
கணிதம் தெரியவில்லை
நீ வகுப்பறைக்கு வந்த நாட்களில்

இயற்பியல் !
எனது ஒவ்வொரு பார்வைக்கும் சமமான
அல்லது எதிரான பார்வை உன்ன்னிடமிருது ...

வேதியியல் !
உன் மௌனம் என்னை கரைக்கும் கரைசல்...
உன் புன்னகை என்னை சிதறடிக்கும் கூழ்மம்...
உன் பார்வை என்னுள் உண்டாகிய தொங்கல்...

கணிதம் !
உன் கண்சிமிட்டலே என் தேற்றங்கள்...
உன் புன்னகையே நிகழ்தகவு...
உன் பார்வைகளே என் நவீன இயற்கணிதம்...

Mar 5, 2009

தொலைந்து போன முகவரிகள்


பள்ளி அறைநேர விடுமுறையில்...
தேர்நிலை அருகே காத்திருந்தேன்
தொலைவில் உன் தோழிகளோடு நீ...
உன் தோழிகள் என்னை உனக்கு உணர்த்த...
நீயோ என்னை பர்ர்காதது போல் உரையாடலில்...
என்னை கடந்தபின் உன் தோழிகளுக்கு தெரியாமல்...
முகம் வறுத்தி திரும்பி பார்கின்றாய்...
அந்த காத்திருப்புகள்
எனது காலசுவடுகளின் (தொலைந்து போன) முகவரிகள்......