Nov 18, 2012

பிரம்மன் பணி நீக்கம்



தேவதைகளை
அழகாய் படைக்க
கையூட்டு பெற்றுக்கொண்டு
உன் படைப்பின்
குறிப்புகளை ஆராய்ந்ததால் ...

Nov 11, 2012

தேவதை



நீ குழந்தைகளோடுதான்
விளையாடுகிறாய்
ஆனால் அவர்களுக்கோ

தேவதையுடன்  
விளையாடுவது போல
ஓர் உணர்வு   ...

காதல்...களவாடுகிறது...



நீ தெரிந்து 
அணைப்பதை விட 
எனக்கு தெரியாமல் 
கொடுக்கும் முத்தங்களில் தான் 
உன் காதல் 
எனதுயிரை மிகுதியாய் 
களவாடுகிறது...

Nov 6, 2012

வாசலின் கதவுகள்




இலக்கினை நோக்கிய 
பயணத்தில் வெற்றியின் 
கதவுகள் திறக்கையில் 
அதன் காத்திருப்புகள் 
மகிழ்சியாய் வழியனுப்பும் 
முற்றுப்பெறாத சாதனைகள் 
தொடரட்டுமென்று ...

 

நான் என்பது நீ ...




நான் விரும்பினாலும் 
வெறுத்தாலும் 
தொடர்ந்தாலும்
விலகினாலும் 
மாறாதது 
உன் அன்பு மட்டுமே ...

பொய் கோபங்களிலும் 
மனவேறுபாடுகளிலும்
என் மனம் நிரம்பும் பொழுதும் 
எனது நிழலாய் தொடர்வது 
நீ மட்டுமே ...


Aug 30, 2012

தேன் தமிழ்



எறும்புகள் 
அணிவகுத்து   
செல்கின்றன ....
வெள்ளைத் தாளில்
உனது பெயர் !

செல்லமாய் அடம் பிடிக்கும் ...


நீ வேற்று கிரகத்தில் 
வசிப்பாயேயானால் 
பூமி கோளம் 
சிறு பந்தாகி 
உன் கையில்
விளையாட 
செல்லமாய் 
அடம் பிடிக்கும் ...

தேசிய பூக்கள் தினம் ...






தேசிய பூக்கள் தினம் 
கொண்டாட பூக்களிடம் 
ஆலோசனை கேட்டபோது 
அனைத்து பூக்களும் 
ஒன்று கூடி ஒருமனதாய் 
உன் பிறந்தநாளை 
தேர்ந்தெடுத்தன

Apr 27, 2012

வானவில்

 
நான் வானவில் 
சிரித்து பார்த்ததில்லை 
உனை பார்க்கும் வரையில் ....

உன் சிரிப்பினை விட அழகு 
அதனை மறைக்க முயற்சிக்கும் 
உன்  வெட்கத்திற்கு 

உன்  வெட்கத்தை விட 
அழகு அந்த வெட்கம் 
வெளிக்கொணரும் 
குறும்பு முகபாவம் ...

இன்னும் முழுதாய் 
முற்றுப் பெறவில்லை 
சிந்திக்க இயலாமையால் ...

Apr 24, 2012

வாழ்க்கை




எதையும் எழுதாது
கசைக்கி எறிந்த
வெள்ளை தாள்
காற்றோடு தரையில்
அடித்துச் செல்வது போல்
ஒரு வாழ்க்கை ....

மழை... புன்னகை... இதழ்... நீ...


எனது  ஆழ் துக்கத்தையும்
சிதறடிக்கும் வல்லமை 
உன் இதழ் பிரியாத 
சிறு புன்னகைக்கு உண்டு ... 

என் அகவைகள் அனைத்தும் 
ஒவ்வொரு மைல் கல்லிலும் 
முகாமிட்டு காத்திருக்கின்றன
நீ வரும் வழியெங்கும் ...

உன் நிழலாய் வருவதற்காக ... 

சித்திரை வெயில்
உச்சி வேளையில்
கருமேகங்கள் சூழ்ந்து
மழை பொழிவது போல்
என்னை கடந்து சென்று 
பின் நீ திரும்பி பார்ப்பது...

Mar 9, 2012

உன்னோடு எடுத்துச்செல் ....

பிரிவினை
பலமுறை
கடந்திருக்கிறேன் ....

இன்று
முதல்  முறையாய்
மனம் அடம்பிடிகின்றது !

உன்னோடு என்
தனிமையையும் எடுத்துச்செல் ....
உனை நினைவுபடுத்தும்
நிமிடங்களுடன் ....