எப்பொழுதும் என்னிடத்தில்
உன்னை நிரம்பச்செய்வது
உன்னுள் கரைந்துள்ள
மழலை மொழிதலும்
மென்(பெண்)மை குறும்புத்தனமும்
வாசல்படி தாண்டி
மீண்டும் உள்நுழையும்
வாழ்கை இடைவெளிகளில்
உவகை களிப்பு வெறுப்பு
ஏமாற்றம் கோபம் உடுத்தி
அந்நாளை அசைபோடும்
தருணங்களில்
நிகழ்காலம் மறந்து
நித்திரை கொள்ள முயலும் போது
செவிகளில் உன் மொழிதலும்
இமை மூடிய விழிகளில்
நம் காட்சிகளும் எனக்குள்
வியாபிக்கின்றன ..
நொடிகளில் துவங்கி
நேரங்களை தின்று கொண்டே
உயிர்பெறும் அந்த நினைவுகளும்
நீயும் உள்ளவரை
வாழ்தல் எனக்கு
வன்மையாக பிடித்திருகின்றது