May 8, 2010

வாழிடம் தேடி


தூண்டியவன் துயில் கொள்கிறான்
தூண்டப்பட்டவன் துக்கம் செய்கிறான்

தடையின்றி பயணிக்கிறது ஆக்கபூர்வமான
மனிதவளம் அழிவுப்பாதையில் ...

உணர்வுகளின் விளையாட்டில்
உயிர் தோற்கிறது
உரிமைகள் மீறப்படுகின்றது ...

சிந்திய உதிரமும் சிறுநொடியில்
மண்ணில் கலந்து தின்மமாகின்றது
வன்முறையின் நிறமும் சிகப்பு ...

இயன்றவன் இறையாண்மை பேசுகிறான்
இயலாதவன் அரசியல் பேசுகிறான்
பாவப்பட்ட மனிதமோ பல்லக்கில்
பயணிக்கிறது பாதாளத்தில் விழ ...

வடக்கும் தெற்கும்
கிழக்கும் மேற்கும்
திசையின்றி பயணிக்கிறது
வன்முறையற்ற வாழிடம் தேடி !

1 comment:

  1. உங்களது வாழ்த்துக்கள் என்னை
    இணையதள பதிப்பகம் வரை கொண்டு சேர்த்தமைக்கு
    என்றென்றும் எனது நன்றிகள் ....
    http://youthful.vikatan.com/youth/NYouth/yuvarajapoem150510.asp

    ReplyDelete