May 8, 2010

பெண்வாசம்


காற்றில் அசைந்தாடும்
கொடியும் மௌனம் மீட்டுகிறது
உன் துப்பட்டா
அதன் மேல் விழுந்ததால் ...
பெண்வாசம் சுவாசிக்க ...

நீ பிரசவத்திற்காக
உன் அம்மா வீட்டில் ...
உன்னுடன் நான் தினமும்
குளிக்கிறேன் !
குளியலறை சுவற்றில் நீ ஒட்டிய
உன் நெற்றிப் பொட்டுடன் ...

நித்திரையற்ற கனவுகளும்
நிஜமற்ற நினைவுகளும்
பொய் கூறா கவிதைகளும்
ஊடல்லற்ற காதலும்
இனிப்பற்ற சர்க்கரையும் போல்
நீயற்ற நம் வீடு ....

1 comment:

  1. //உன்னுடன் நான் தினமும்
    குளிக்கிறேன் !
    குளியலறை சுவற்றில் நீ ஒட்டிய
    உன் நெற்றிப் பொட்டுடன் ...//

    பிரிவித் துயரின் அழகான பதிவு இவ்வரிகள்..

    ReplyDelete