Mar 4, 2013

இன்றைய பகலிடம் நேற்றைய இரவு ...



விடைபெற்று சென்றவளிடம்
பறிகொடுத்த சூழல் எனை ஆள
சில பாதங்கள் எடுத்துவைத்து
திரும்பியவள்
ஓடி வந்து மார்பில்
முகம் புதைக்கிறாள்
வெட்கம் பிடுங்கி தின்கிறதென !


அவள் நெற்றிப்புள்ளியில்
தொடங்கும் வகிடில்
இதழ் பதித்து நின்றுவிட்டேன் ...


மெதுவாய் நீந்திக் கடக்கிறது
இன்றைய பகலிடம்
நேற்றைய இரவு ..
ஒவ்வொருமுறையும் ....

No comments:

Post a Comment