Jul 23, 2013

ஏதும் பரிமாறப்படவில்லையெனினும்



தொலைக்காட்சியின் ஒளி  
கறுப்பு வர்ணம் உடுத்தியிருந்த 
யாமத்தை வென்று 
அறை முழுதும் மங்கலான 
வெளிச்சம் வியாபித்திருந்தது  

மாலை நேர ஊடலில்
நம்மை மௌனம் அடிமையாக்கிய சூழலில் 
என்மடி மீது தலை சாய்த்து விழிகளால்
மௌனத்தை கரைக்கிறாள் 

சொல்ல இயலா ஓர் உணர்வு  
அடைக்கும் தொண்டைகுழியையும்
உடைத்துவிட்டு 
கண்ணீராகவும் காதலாகவும் 
என் தேவதையின் கன்னத்தில் விழ !

அணிச்சையாய் பார்த்த பார்வை 
என் ஆயுள் வரை போதுமடி 
இனி  நம்முள் ஏதும்
பரிமாறப்படவில்லையெனினும் கூட...

No comments:

Post a Comment