களவாடி வாழ்ந்த நொடிகள் ...
நிரல்களாக வைக்கப்பட்ட
ரோஜா பூக்களை
இவள் கண்களால்
சுட்டும் போது
அவை காற்றிடம்
ஈரத்தை களவாடி
தன் இதழ்களை
மெருகேற்றுகின்றன
இவள் சூடப்போகும்
மஞ்சள் பூ தவிர்த்து
மற்றனைத்தும்
சோகம் கரைந்து
மகிழ்வுடன்
நினைவுகொள்கின்றன
அவள் சூடிய பூவோடு
வாழ்ந்த நொடிகளை ...
No comments:
Post a Comment