காலைப்பொழுது விடிகின்றது ...
ஆதவன் சன்னல் வழியே..
காலை வணக்கம் சொல்கின்றான்
பேருந்து நிறுத்தத்தில்
பள்ளிக்குழந்தைகள் ஆனந்தமாய்
விளையாடுகின்றார்கள்.. எங்கும் அமைதி ...
பத்திரிக்கை தொலைக்காட்சியில் கூட
எவ்வித வன்முறை செய்திகளும் இல்லை
தேநீர் வரும்வரை செய்திகள் ஓடிகொண்டிருகின்றது ...
இலங்கையில் தமிழனும் சிங்களனும்
பரஸ்பரம் பேசிகொண்டிருகின்ரர்கள்...
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மக்களின்
இல்ல திருமணவிழா
பாகிஸ்தானில் இந்தியரின் தபால்தலை..
இந்தியாவில் பாகிஸ்தானியரின் திருவுருவச்சிலை
அமெரிக்க கல்லூரிகளில்
ஈராக் மாணவமணிகள் ...
சோமாலியாவில் உணவுப்பொருள் ஏற்றுமதி
இம்முறையும் உலகச்சுகாதார விருது இந்தியாவிற்கே
நிலவில் கோடம்பாக்கம் திரையரங்கு...
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல கட்டணக்குறைப்பு !
அணைத்து நாடுகளும்
ஒன்றுகூடி உலகமைதி நாளை
மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றர்கள்
இந்திய பிரதமர் இருபத்திஎட்டாம்
பிறந்த நாளை இனிதே கொண்டாடுகின்றார் ...
பள்ளி சேர்க்கை படிவத்தில்
ஜாதி மதம் இனம் அச்சடிக்கப்படவில்லை
குமரி முதல் காஷ்மீர் வரை
எந்த ரயில்நிலையத்திலும் பிச்சை குரல் ஒலிக்கவில்லை...
இன்னும் பல உலகச்செய்திகளில்
வளமையும் உயர்ந்த வாழ்க்கைத்தரமும்...
கண்விழித்து பார்த்தால் கனவு !
வரலாறு முதன்மைதான்
ஆனால் அந்த வரலாறு வரும்
தலைமுறையினர்க்கு வன்முறையற்ற
வாழ்கையை தரவேண்டும்..
காயங்களும் வடுக்களும் நம்மோடு...
வரும் தலைமுறையினர்க்கு வன்முறை
தெரியாத வரலாற்றை போதிப்போம்
அமைதி எனும் மொழி அனைத்து
நாடுகளுக்கும் தேசிய மொழியாக இருக்கட்டும்...
வாழ்க பாரதம் வளர்க வையகம்...
No comments:
Post a Comment