Mar 7, 2009

சிறுகனத்தில் சிற்றுதடு கடித்து...


கண்கள் இறுகமூடி
இரவென்னும் ஆழமறிய
தொலைதூரம் பயணித்தேன்
கனவென்னும் வாகனத்தில் !

எதிர்பட்ட ஓர் சிறுமியிடம்
உன் மனம்கவர் நிறம் கேட்டேன்
வெண்மை என்று கூறிய
சிறுகனத்தில் சிற்றுதடு கடித்து
சிகப்பென்று கூறினால் அச்சிறுமி ...

என்புருவம் பார்த்த அப்பிஞ்சு ...
காலைப்பொழுதில் பணித்துளிகளினூடே
மலர்ந்த வெள்ளை ரோஜா
முழுக்கதிரவன் வரும் வேளைக்குள்
சிப்பாய்களின் சினத்தில்
என்மக்கள் குருதிதெறித்து சிகப்பாய்...
வெண்மை நிறத்தை நீ எங்கு
காணினும் காணமுடியாதென்றால் அச்சிறுமி...

எதிர்பட்ட ஒரு பெரியவரிடம்
தனிமையின் தாக்கத்தை
மறக்க அழைத்தேன்
தாய்மண்ணை விடப்பெரிதல்ல
என்தனிமை முடியுமென்றால்
உன் நம்பிக்கையையும் என்னிடத்தில்
தந்துவிட்டுபோ என்றார் ...

பயணக்களைப்பில் எனைமறந்து
அயர்ந்துவிட்டேன் மெல்லிய வார்த்தைகளாய்
தொலைவில் ...

அறிக்கைகளும் சிற்சில மோதல்களுமே
நம் அரசியலுக்கு போதுமென்றார்கள் !
கணவிலும்கூட என் இயலாமை
என் நம்பிக்கையை தோற்கடித்தது...

No comments:

Post a Comment